திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லெனின் நினைவு தின நிகழ்ச்சி
ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலானவற்றில் பல ஆண்டுகளுக்கு முன்னர் மன்னராட்சி தான் நடந்து வந்தன. அவற்றில் ஒன்று ரஷியா. ரஷியாவில் மிகவும் கொடூரமான ஜார் மன்னர்களின் ஆட்சி நடந்து வந்தது.ஜார் மன்னர்கள் இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் உயிரைப்பறிக்கும் கொடுஞ்செயல் செய்து வந்தனர். வறுமையில் வாடிய நாட்டு மக்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டு வந்தனர்.
அத்தகைய கொடிய மன்னராட்சியை மக்கள் புரட்சியின் மூலம் மவீழ்த்தி சோவியத் ரஷ்யாவை விடுதலை அடையச் செய்த மாவீரர் தான் லெனின். லெனின் நடத்திய புரட்சி ரஷிய புரட்சியாக வரலாறு கூறுகிறது. அத்தகைய மாவீரன் லெனின் நூற்றாண்டு நினைவு தினம் ஜனவரி 21ல் உலகம் முழுவதும் நடைபெற்றது.
திருச்சி மாநகரில்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில்நடைபெற்ற கருத்தரங்கில்தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் குமார், பேராசிரியர் மணிமோகன் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.
திருச்சி மாநகர் மேற்கு பகுதியில் 23 வது வார்டில் அலங்கரிக்கப்பட்ட மாமேதை லெனின் திரு உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பொருளாளர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், மாநகர் மாவட்ட செயலாளர் சிவா, பகுதிதுணைச் செயலாளர் முருகன், பகுதி குழு உறுப்பினர்கள் ஆனந்தன் ,மௌலானா, மாணிக்கம் ,சரண்சிங், ,நாகராஜன்,சீனிவாசன் மாதர் சம்மேளன செயலாளர் சுமதி, ராஜேஸ்வரி உள்ளிட்ட திரளான உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
திருவரங்கம் பகுதியில் பகுதி செயலாளர் பார்வதி தலைமையிலும் அபிஷேக புரத்தில் பகுதி செயலாளர். அஞ்சுகம் தலைமையிலும் மணிகண்டம் ஒன்றியத்தில் பகுதி செயலாளர் முருகன் தலைமையிலும் பொன்மலை பகுதி செயலாளர் ராஜா தலைமையிலும் மாமேதை லெனின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu