திருச்சியில் மாணவர்களுக்கு மிதி வண்டி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்
விலையில்லா மிதிவண்டி பெற்றுக்கொண்ட மாணவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்.
தமிழகத்தில் பிளஸ் 1 படித்து வரும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மதிவண்டிகள் வழங்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் கல்வி அதிகாரிகளுடன் இணைந்து மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் திருச்சி புனித வள்ளலார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கும் விழாவானது இன்று நடைபெற்றது. இதில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை ஜார்ஜ்,பள்ளியின் தாளாளர் அருட் தந்தை இஞ்ஞாசி,பள்ளியின் முதுகலை ஆசிரியர் ராஜமாணிக்கம், திருச்சி மாநகரட்சியின் மண்டலம்_2 கோட்டத் தலைவர் ஜெயநிர்மலா,வட்டச் செயலாளர் இளங்கோ, உதய அரபிக்,சங்கர், திருச்சி தெற்கு மாவட்ட பிரதிநிதி தமுகேஷ் குமார், மயில் குணா மற்றும் மாணவர்கள் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
விலையில்லா மிதிவண்டி பெற்ற மாணவர்கள் தமிழக அரசுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu