/* */

திருச்சியில் திரையுடன் கூடிய சட்ட விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்

திருச்சியில் நடமாடும் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை நீதிபதி செல்வம் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருச்சியில் திரையுடன் கூடிய  சட்ட விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்
X

திருச்சியில் நடமாடும் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை நீதிபதி செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 45 நாட்கள் பல்வேறு வகையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடமாடும் சட்ட விழிப்புணர்வு வாகனம் இன்று துவக்கி வைக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு வாகனத்தை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கிளசன்டன் பிளசட் அறிவுறுத்தலின்படி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த வாகனத்தின் திரையில் இலவச சட்ட உதவிகள் மற்றும் சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குற்ற வழக்குகள் பற்றிய விழிப்புணர்வு காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும். மேலும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள 10 கிராமங்களில் இலவச சட்ட உதவிகளுக்காக இந்த வாகனம் செல்கிறது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி நீதிமன்ற தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Oct 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...