திருச்சியில் மாணவ- மாணவிகள் பங்கேற்ற சட்ட விழிப்புணர்வு பேரணி

திருச்சியில் மாணவ- மாணவிகள் பங்கேற்ற  சட்ட விழிப்புணர்வு பேரணி
X

திருச்சியில் மாணவ- மாணவிகள் பங்கேற்ற சட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.

திருச்சியில் மாணவ- மாணவி பங்கேற்ற சட்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று 14-ஆம் தேதி சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி கிளாட்ஸ்டன் பிளசட் தாகூர் கொடி அசைத்து துவைக்கி வைத்தார்.

இந்த பேரணி நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு எம்.ஜி.ஆர். சிலை வழியாக அரசு தலைமை மருத்துவமனை வரை சென்று அங்கிருந்து மீண்டும் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தடைந்தது.

பேரணியின் போது சட்ட விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொது மக்களுக்கு வினியோகிக்கப் பட்டது.இந்த சட்ட விழிப்புணர்வு பேரணியில் அங்கன்வாடி பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள், பிஷப் ஹீபர் கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்கள்,நீதிமன்ற ஊழியர்கள் சமூக ஆர்வலர்கள்,மாவட்ட, சார்பு, குற்றவியல் உரிமையியல் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்கள், மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு வழக்கறிஞர்கள்உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!