திருச்சி விமான நிலைய ரன்வே விரிவாக்க பணிக்கு நிலம்: கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருச்சி விமான நிலைய ரன்வே விரிவாக்க பணிக்கு நிலம்: கலெக்டர் முக்கிய அறிவிப்பு
X

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் கழுகு பார்வை காட்சி.

திருச்சி விமான நிலைய ரன்வே விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக கலெக்டர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கான ஓடுபாதை விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும், மார்ச் மாத இறுதிக்குள் முழு பணிகளும் முடிவடையும் என திருச்சி மாவட்ட கலெக்டர் எம்.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு கூடுதல் விமானங்கள் வர தொடங்கி உள்ள நிலையில் திருச்சி விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதி வருகிறது. ரேஷன் கடையில் நிலவுவது போல மிக அதிக கூட்டம் இங்கே நிலவி வருகிறது. சேலம், திருச்சி போன்ற மாவட்டங்களில் விமான சேவைகள் தொடங்கப்படுகின்றன. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை-சேலம் இடையே விமான சேவை மீண்டும் தொடங்கி உள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

இப்போது இண்டிகோ ஏர்லைன்ஸ் சென்னையில் இருந்து சேலத்திற்கு சேவையைத் தொடங்கி உள்ளது, முதல் விமானம் ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும். தினமும் காலை 11.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 12.30 மணிக்கு சேலம் சென்றடையும்.

பின்னர் சேலத்தில் இருந்து மதியம் 12.50 மணிக்கு சென்னைக்கு புறப்படும் விமானம் 1.45 மணிக்கு இங்கு தரையிறங்கும். டிக்கெட் முன்பதிவுகளின் அடிப்படையில் நாளொன்றுக்கான சேவைகள் அதிகரிக்கப்படும் என்றும், டிக்கெட் விலை 2,390 ரூபாயிலிருந்து தொடங்கும் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இன்னொரு பக்கம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கான ஓடுபாதை விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும், மார்ச் மாத இறுதிக்குள் முழு பணிகளும் முடிவடையும் என திருச்சி மாவட்ட கலெக்டர் எம்.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இதனால் இங்கே விரைவில் ரன் வே விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கான ஓடுபாதை விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும், மார்ச் மாத இறுதிக்குள் முழு பணிகளும் முடிவடையும் என திருச்சி கலெக்டர் எம்.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி - மும்பை இடையே சமீபத்தில் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த விமானத்தில் செல்வதற்காக பயணிகள் அங்கே குவிந்து வரிசையில் நின்றனர். 232 இடங்கள் கொண்ட இண்டிகோவின் À321 விமானத்தில் 232 பயணிகளும் வரிசையில் காத்து இருந்தனர். பலரும் இந்த சேவையில் பெரிதாக கூட்டம் இருக்காது என்று நினைத்த போது.. அதை முறியடிக்கும் விதமாக இந்த சேவை தொடக்கப்பட்டதில் இருந்தே அதில் முழுமையாக கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த சேவையை மக்கள் பயன்படுத்துவார்களா என்ற சந்தேகங்களை முறியடிக்கும் விதமாக நேற்று இந்த சம்பவம் நடந்து உள்ளது. இந்த சேவையை தொடங்க பல காலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில்தான் தொடக்கத்திலேயே முழுக்க முழுக்க கூட்டமாக இந்த விமான சேவை செயல்பட்டு வருகிறது. முக்கியமாக எலிவேட்டரில் உட்காரும் அளவிற்கு அதிக அளவில் இங்கே கூட்டம் நிலவி வருகிறது. இதனால் இனி வரும் நாட்களில் தமிழ்நாட்டிற்கு கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு புதிய விமான சேவைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து கோலாலம்பூருக்கு மார்ச் 31-ம் 2024 முதல் புதிய அட்டவணை அடிப்படையில் விமானத்தை இயக்க முன்வந்துள்ளது. அதாவது கூடுதல் விமானம் இனி கோலாலம்பூருக்கு இயக்கப்படும் . இதற்கான புக்கிங் தொடங்க உள்ளது. 24/7 ஏர்லைன்ஸ் அட்டவணையின் அடிப்படையில் அதிக விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளனர். டெர்மினல் கட்டிடத்தின் நெரிசலைக் குறைக்க அங்கே கட்டிடம் மறுகட்டமைக்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் இங்கே வெளிநாட்டு விமானங்கள் இயங்கும்.

இந்த நிலையில் தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தினசரி மும்பை - மதுரை - மும்பை விமானங்கள் 22-பிப்-2024 முதல் அமலுக்கு வருகிறது BOM 15:55 IXM 18:00 IXM 19:25 BOM 21:30 ஆகிய விமானங்கள் இங்கே வர உள்ளன. மதுரைக்கு என்று சர்வதேச விமான நிலையம் இல்லை. இருந்தாலும் தற்காலிகமாக உள்ளூர் விமான நிலையம் சர்வதேச விமான சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் மதுரைக்கு நல்ல செய்தியாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!