திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு
X

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் விழாவில் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Trichy Local News Today in Tamil -திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

Trichy Local News Today in Tamil -எம்.எஸ். உதயமூர்த்தியால் தொடங்கப்பட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காகவும், பொதுமக்களின் நலனிற்காகவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவை ஆண்டு தோறும் மிக சிறப்பாக நடத்தி அப்துல் கலாம் மிகவும் நேசித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவாக நடத்தப்பட்டது. மக்கள் சக்தி இயக்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் இரா.இளங்கோ, மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், துணை பொதுச் செயலாளர் வெ.ரா.சந்திராசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கடந்த பத்து ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி தந்து அறப்பணி போல் ஆசிரியப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இந்த விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

புத்தக வாசிப்பு என்பது ஒரு பொழுது போக்காக அல்லாமல் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். மனதை சங்கடப் படுத்தும் பல்வேறு காரணிகள் உள்ள இன்றைய சூழலில் புத்தகம் வாசிப்பது மனதை தெளிவுப்படுத்தும். சமுகத்தைப் பற்றிய நம்முடைய பார்வையை விரிவடையச் செய்யும் .மன உறுதி மேம்படும். "நம்மால் முடியும் " என்ற தன்னம்பிக்கை புத்கதம் படிப்பதன் மூலம் நமக்கு கிடைக்கிறது. நம்முடைய நாட்டை ஆளும் தலைவர்களில் பலரும் புத்தகம் படிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஐயா அப்துல் கலாம் புத்தகங்களுக்கு இடையே தான் இறுதி நாள் வரையில் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். அவரது கனவை நனவாக்க மாணவ மாணவிகள் தினமும் புத்கதம் படிப்பதை தங்களது வாழ்வுடன் தொடர்பு படுத்திக்கொள்ளவேண்டும். மாதம் ஒரு புத்தகத்தை திறன் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார் பேசினார்.

மேலும் ஆசிரியர்கள் கோ.அருணா (தமிழ்), ஆர்.சந்திராதேவி (ஆங்கிலம்) ஜே.சி. ரீனா (கணிதம்) ர.ஜெயந்தி (அறிவியல் ) ராணி (சமூக அறிவியல் ) ஆகியோரை பாராட்டி சான்றிதழ், மற்றும் நினைவு பரிசு வழங்கி, ஆசிரியர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார்.

விழாவில் மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் ஆர்.கே.ராஜா, நரேஷ், வெங்கடேஷ், ஆசிரியர்கள் மகேஸ்வரி, விக்டோரியா, மோச்சராணி, ஆசிரியர் பயிற்சியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Weight Loss Tips In Tamil