ரயில்வே பணிமனை தொழிலாளி தவற விட்ட செல்போனை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
ரயில்வே ஊழியர் தவறவிட்ட செல்போனை ஒப்படைத்த ஆட்டோ மெக்கானிக்.
ரயில்வே ஊழியர் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தவறவிட்ட செல்போனை ஒப்படைத்த ஆட்டோ மெக்கானிக் ஜெயராஜுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி பொன்மலை ரயில்வே ஒர்க்ஷாப்பில் பணிபுரியும் வடமாநில தொழிலாளி ராமராஜ் மீனா வேலைக்கு வரும் போது அவரது மொபைல் தவறி கீழே விழுந்து விட்டது.
இந்த தகவலை அவரிடம் பணிபுரியும் மணிகண்டன் என்பவரிடம் தெரிவிக்க , அவர் போனில் இருந்து அழைத்த போது பொன்மலையடிவாரம் ஆட்டோ மெக்கானிக் ஜெயராஜ் என்பவர் எடுத்து என்ன சொல்லுங்கள், என்றார்.
நீங்கள் வைத்து இருக்கும் மொபைல் என்னுடையது என்றார். இந்நிலையில் ராம்ராஜ் தவறவிட்ட செல்போனை எடுத்த மெக்கானிக் ஜெயராஜ் அந்த செல்போன் தன்னிடம் இருப்பதாகவும், அதை பொன்மலையடிவாரம் இரயில்வே பள்ளி பஸ் நிலையம் அருகில் உள்ள எனது மெக்கானிக் கடை பட்டறையில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து செல்போனை தொலைத்த ரயில்வேயில் பணிபுரியும் ராம்ராஜ் மீனா பொன்மலை அடிவாரம் மெக்கானிக்கல் ஜெயராஜ் சந்தித்து தனதுசெல்போனை பெற்றுக்கொண்டார்.
இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும்போது தவறி விழுந்த 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை பத்திரப்படுத்தி அதை நேர்மையோடு உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ மெக்கானிக் ஜெயராஜ் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu