திருச்சி 20-வது வார்டில் இளைஞர்களுடன் கே.சி. ஆறுமுகம் வாக்கு சேகரிப்பு

திருச்சி 20-வது வார்டில்   இளைஞர்களுடன் கே.சி. ஆறுமுகம் வாக்கு சேகரிப்பு
X

திருச்சி மாநகராட்சி 20வது வார்டு வேட்பாளர் கே.சி. ஆறுமுகம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி 20-வது வார்டில் இளைஞர்களுடன் கே.சி. ஆறுமுகம் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறு நாள் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி இதுவரை நடந்து வந்த அனல் பறக்கும் வேட்பாளர்களின் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்வதை தொடர்ந்து இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு நடந்தது.

திருச்சி மாநகராட்சி 20வது வார்டில் போட்டியிடும் லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சி சார்பில் முன்னாள் கவுன்சிலர் கே.சி. ஆறுமுகம் போட்டியிடுகிறார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் இன்று இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் இறங்கினார். ஏற்கனவே சென்ற தெருக்களில் மீண்டும் வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு முகம் பார்க்கும் கண்ணாடி சின்னத்திற்கு ஆதரவளிப்பதாக பெண்கள் உறுதி அளித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!