முகம் பார்க்கும் கண்ணாடி சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார் கே.சி. ஆறுமுகம்

முகம் பார்க்கும் கண்ணாடி சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார் கே.சி. ஆறுமுகம்
X

முகம் பார்க்கும் கண்ணாடி சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார் திருச்சி மாநகராட்சி 20வது வார்டு லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சி வேட்பாளர் கே.சி. ஆறுமுகம்.

திருச்சி மாநகராட்சி 20வது வார்டு வேட்பாளர்கே.சி. ஆறுமுகம் முகம் பார்க்கும் கண்ணாடி சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

திருச்சி மாநகராட்சி 20 வது வார்டில் போட்டியிடும் லோக்தந்திரிக் ஜனதா தள கட்சி வேட்பாளர் கே.சி. ஆறுமுகம் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு வியாபாரிகள், தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.


அவர்களிடம் முகம் பார்க்கும் கண்ணாடி சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கே.சி. ஆறுமுகம் கேட்டுக்கொண்டார். மணி மண்டப சாலை, நடுகுஜிலித் தெரு,மேல புலிவார் ரோடு, தெருவில் இளைஞர்களுடன் சென்று ஆறுமுகம் வாக்கு சேகரித்தார்.

அப்போது ஏற்கனவே மாமன்ற உறுப்பினராக இருந்து சிறப்பாக பணியாற்றிய உங்களுக்கே எங்கள் வாக்கு என அப்பகுதி மக்கள் உறுதி அளித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!