முகம் பார்க்கும் கண்ணாடி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் கே.சி.ஆறுமுகம்

முகம் பார்க்கும் கண்ணாடி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் கே.சி.ஆறுமுகம்
X

முகம் பார்க்கும் கண்ணாடி சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார் வேட்பாளர் கே.சி. ஆறுமுகம்.

திருச்சி 20வதுவார்டில் போட்டியிடும் கே.சி.ஆறுமுகம், முகம் பார்க்கும் கண்ணாடி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

திருச்சி மாநகராட்சி 20வது வார்டில் லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சி சார்பில் முன்னாள் கவுன்சிலர் கே.சி. ஆறுமுகம் போட்டியிடுகிறார். இன்று கே.சி. ஆறுமுகம் கோபாலகிருஷ்ணபிள்ளை தெரு, வாத்தியார் சந்து, கொல்ல வடுகர் சந்து,நீத்துக்கராத் தெருவில் இளைஞர்களுடன் வாக்கு சேகரித்தார்.


அவர் சென்ற இடங்களில் எல்லாம் மாநகராட்சி பணிகளில் மிகுந்த அனுபவம் உள்ள உங்களுக்கு தான் எங்கள் ஓட்டு என மக்கள் உறுதி அளித்தனர். அப்போது அவர்களிடம் வேட்பாளர் ஆறுமுகம் தனது சின்னமான முகம் பார்க்கும் கண்ணாடியை காண்பித்து மறக்காமல் இந்த சின்னத்திற்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்