திருச்சியில் கவிஞர் வைரமுத்து பங்கேற்ற கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா
திருச்சியில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு நிறைவுவிழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
தி.மு.க. தலைவராகவும் தமிழக முதல் அமைச்சராகவும் இருந்தவர் மு. கருணாநிதி. அண்ணா உள்ளிட்ட ஐவரால் சென்னை ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் 1949 ம் ஆண்டுதொடங்கப்பட்ட இயக்கம் தான் திமுக. அண்ணாவின் எழுத்து பேச்சாற்றலால் கவரப்பட்ட தமிழக மக்கள் அவருக்கு வெற்றி வாகை சூடி கொடுத்தனர். இதன் காரணமாக தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் முதல் முதல் அமைச்சர் என்ற பெருமை அறிஞர் அண்ணாவிற்கு கிடைத்தது. ஆனால் நீண்ட நாட்கள் அவரால் முதல்வராக பணி செய்ய முடியவில்லை. பதவி ஏற்ற இரண்டே ஆண்டுகளில் அவர் மரணத்தை தழுவியதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியவர் தான் கருணாநிதி.
கருணாநிதியை விட மூத்த ராஜதந்திரிகள் பலர் களத்தில் இருந்தாலும் கருணாநிதி தனது மதியுகத்தால் அவர்கள் அனைவரையும் வீழ்த்தி முதல்வர் பதவியை அலங்கரித்தார். தொடர்ந்து முதல்வராக பதவியில் தொடர முடியவில்லை என்றாலும் வெற்றி, தோல்வி என அடுத்தடுத்து ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தார். தனது இறப்பு வரை திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதி திமுக இந்த அளவிற்கு நிலைத்து நிற்பதற்கும் காரண கர்த்தாவாக இருந்தார். அண்ணாவால் தொடங்கி வைக்கப்பட்ட திராவிட இயக்கங்களின் ஆட்சி தான் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக திமுக அதிமுக ஆட்சிகள் என இன்று வரை தமிழகத்தில் கோலோச்சி வருகிறது. தற்போது கருணாநிதியின் மகனும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் தான் முதல்வராக உள்ளார்.
இத்தகையை சிறப்புக்குரிய கருணாநிதி நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் ஓராண்டு காலம் மிக சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற விழாக்களில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று தனது தந்தைக்கு பெருமை சேர்ந்தார்.
கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா நிறைவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அரசியலில் கலைஞர் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கவிஞர் வைரமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பீட்டர் அல்போன்ஸ், மகேந்திரன், சிந்தனை செல்வன், அப்துல் சமது, செந்திலதிபன் உள்ளிட்டகூட்டணி கட்சி தலைவர் பங்கேற்று கருணாநிதியின் அரசியல் பணி பற்றி பேசினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu