திருச்சியில் காங்கிரஸ் சார்பில் கக்கன்ஜி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

திருச்சியில் காங்கிரஸ் சார்பில் கக்கன்ஜி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X

திருச்சியில் கக்கன் படத்திற்கு காங்கிசார் மாலை அணிவித்த மரியாதை செய்தனர்.

திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கக்கன்ஜி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கக்கன்ஜி பிறந்த தினம் இன்று காங்கிசார் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்டம் மணிகண்டம் வட்டாரம் நாச்சிகுறிச்சி பஞ்சாயத்தில் எஸ்.சி. எஸ்.டி பிரிவு சார்பில் மாவட்ட செயலாளர் வினோத் குமார் தலைமையில் அவரது திருவுருவப் படத்திற்கு நாச்சிகுறிச்சி அருண்பிரசாத் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம் சரவணன் கலந்துகொண்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்வில் முன்னாள் வட்டார தலைவர் தனசேகர், சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், மன்சூர், வீரமணி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!