திருச்சி அருணாசலம் மன்றத்தில் கக்கன்ஜி உருவ படம் திறப்பு

திருச்சி அருணாசலம் மன்றத்தில் கக்கன்ஜி உருவ படம் திறப்பு
X

கக்கன்ஜி உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருச்சி அருணாச்சல மன்றத்தில் சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான கக்கன்ஜி திருவுருவப் படத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம் சரவணன் திறந்துவைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் கள்ளத் தெரு குமார், திலகர், நாச்சிகுறிச்சி அருண்பிரசாத், ஜீவா நகர் மாரிமுத்து, சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், சங்கர் வெல்லமண்டி பாலசுப்பிரமணியன், மகளிர் அணி அஞ்சு, கள்ளத்தெரு ஜெயக்குமார், பஜார் செந்தில் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை எஸ்,சி எஸ்,டி பிரிவு மாவட்ட செயலாளர் நாச்சிகுறிச்சி வினோத்குமார் செய்திருந்தார்

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!