ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவரானார் கடல்மணி

ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவரானார் கடல்மணி
X

ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பெற்றி பெற்ற கடல்மணி சிறுமருதூர் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருச்சி மாவட்டம் சிறுமருதூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஊராட்சி தலைவராக கடல்மணி தேர்வு செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றியம் சிறுமருதூர் ஊராட்சி மன்ற தலைவருக்கான இடைத்தேர்தல் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது. இந்த இடைத் தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து போன ரமேஷ்குமார் என்பவரின் மனைவி கன்னியம்மாள் உட்பட மூன்று பேர் போட்டியிட்டனர்.

இந்த சிறுமருதூர் ஊராட்சி 6 வார்டுகளை கொண்டது. இதில் மொத்தம் 1,155 வாக்குகள் உள்ளது. நடைபெற்ற தேர்தலில் 989 வாக்குகள் பதிவானது. திருச்சி மாவட்டத்திலேயே அதிகமான சதவிகிதமாக 86 சதவிகித ஓட்டு பதிவானது.

இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் கதிரவன் என்கிற கடல்மணி என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவரானார். கதிரவன் என்கிற கடல்மணி 424 வாக்குகள் பெற்று 1 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்:

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கன்னியம்மாள் 423 வாக்கு பெற்று ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார். இவருக்கு அடுத்தபடியாக சத்தியநாதன் என்பவர் 137 வாக்குகள் பெற்றிருந்தார். செல்லாத வாக்குகள் 5 பதிவானது.

இந்த வெற்றியின் மூலம் கடல்மணி ஊராட்சி மன்ற தலைவர் பதவியை தன் வசமாக்கி இருக்கிறார். கடல் மணி தி.மு.க.வை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story