திருச்சி ஜோசப் கல்லூரியின் வரலாறு பறைசாற்றும் அருங்காட்சியகம் திறப்பு

திருச்சி ஜோசப் கல்லூரியின் வரலாறு பறைசாற்றும்  அருங்காட்சியகம் திறப்பு
X

திருச்சி  ஜோசப் கல்லூரியில் புதிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டு உள்ளது.

திருச்சி ஜோசப் கல்லூரியின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் புதிய அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

திருச்சி ஜோசப் கல்லூரியின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் புதிய அருங்காட்சியகம் நேற்று திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திருச்சி பிஷப் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி அதிபர் லியோனார்டு பெர்னான்டோ அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.

கல்லூரி தொடங்கி அதன் வளர்ச்சிக்காக பாடுபட்ட கல்லுாரியின் முதல் அதிபரும், முதல்வருமான ஆடிபெர்டின் பெயர் அருங்காட்சியகத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் 1844-ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை கல்லூரி கண்ட வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் குறித்த வரலாற்றுச் சேகரிப்புகள், ரவீந்திரநாத் தாகூர், ஜவஹர்லால் நேரு, சர்.சி.வி.ராமன், ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கல்லூரிக்கு வந்த போது எடுத்த புகைப்படங்கள், பத்திரிகைகளில் வந்த செய்தி தொகுப்புகள் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவரும், முன்னாள் ஜனாதிபதியுமான டாக்டர் அப்துல் கலாமின் வருகை, அவர் அளித்த பங்களிப்பு குறித்த புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது.

மேலும் கல்லூரியின் சிறப்பான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் லாலி ஹால், டிக்பை ஹால் போன்ற பாரம்பரிய கட்டமைப்புகளின் வரலாற்று குறிப்புகளும் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!