மின்வாரிய ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டுக் குழு பிரச்சார பேரவை கூட்டம்

மின்வாரிய ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டுக் குழு பிரச்சார பேரவை கூட்டம்
X
மின்வாரிய ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டுக் குழு பிரச்சார பேரவை கூட்டம் திருச்சியில் நவம்பர் 21ம் தேதி நடக்கிறது.

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் திருச்சி மண்டல பிரச்சார பேரவை கூட்டம் நவம்பர் 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணி அளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பெமினா ஹோட்டல் எதிரில் உள்ள சீனிவாச மகாலில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில துணை தலைவர் ஜி பஷீர் தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்ற பொறியாளர் சங்கத்தின் சட்ட குழு உறுப்பினர் சோ கண்ணன் வரவேற்று பேசுகிறார்.

இதில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில பொருளாளர் பழனி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்ற பொறியாளர் சங்கத்தின் மண்டல செயலாளர் சகாயராஜ், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்ற தொழிலாளர் மற்றும் அலுவலர் சங்கத்தின் மாநில துணை தலைவர் செல்வராஜ் ,தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்ற தொழிலாளர் கழகத்தின் மண்டல செயலாளர் பெருமாள், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில இணை செயலாளர் மோகன ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரியத்தை தனியார் மயமாக்க கூடாது, மின்வாரிய உத்தரவு எண்2 நாள் 12 -4 -2022 ஐமுழுமையாக ரத்து செய்ய வேண்டும், மருத்துவ காப்பீடு திட்ட அமலாக்கத்தில் உள்ள இடர்பாடுகளை களைந்திட வேண்டும், கார்பஸ் பண்ட் திட்டத்தை கைவிட வேண்டும், ஓய்வூதியம் தொடர்ந்து பெற்றிட முத்தரப்பு ஒப்பந்தத்தில் அரசு உத்தரவாதத்தை உறுதிப்படுத்த வேண்டும், 1-7-2023 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. முடிவில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் நன்றி கூறுகிறார்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !