திருச்சி நகை கடையில் 3 தங்க செயின்களை எடுத்து கொண்டு ஓடியவருக்கு வலைவீச்சு

திருச்சி நகை கடையில் 3 தங்க செயின்களை எடுத்து கொண்டு ஓடியவருக்கு வலைவீச்சு
X
திருச்சி அருகே நகை கடையில் இருந்த 3 தங்க செயின்களை எடுத்து கொண்டு தப்பியோடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை கடைவீதியில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான மீனாட்சி ஜூவல்லரி என்ற நகை கடை உள்ளது. இந்த கடையில் நேற்று இரவு சுமார் 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் கோல்ட் காயின் வாங்குவதற்காக நகைகடைக்கு வந்துள்ளார். தங்க காசு வாங்கி கொண்டு அதற்குரிய பணத்தை கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்று கொண்டு உரிய கல்லா பெட்டியில் வைக்கும் நேரத்தில் கடையில் இருந்த 3 தங்க செயின்களை எடுத்து கொண்டு மின்னல் வேகத்தில் கடையிலிருந்து வெளியேறி ரயில்வே டிராக் வழியாக தப்பியோடிவிட்டார். தப்பியோடியவர் பச்சைகலர் முழுகைசட்டையும், கருப்பு கலர் பேண்டும் அணிந்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நகைகடை உரிமையாளர் மனோகரன் (வயது 56) பெட்டவாய்த்தலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது..

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!