திருச்சி: ஜெயலலிதா நினைவு நாள் தொடர்பாக மாவட்ட செயலாளர் அழைப்பு
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பரஞ்ஜோதி.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மக்கள் நல திட்டங்களால் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற கழக நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு அமரர் ஆகிய நாள் 5.12.2016.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் அவரது நினைவு நாளான 5.12.2021 ஞாயிற்றுக்கிழமை நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, கிளை, வார்டு அளவில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் மன ஆறுதல் பெறும் வகையில், அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu