ஜெயலலிதா நினைவு நாள்: திருச்சி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வேண்டுகோள்

ஜெயலலிதா நினைவு நாள்: திருச்சி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
X

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ப. குமார்.

ஜெயலலிதா நினைவு நாளையொட்டி திருச்சி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமார் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி,பேரூர் கழக கிளைக்கழக மற்றும் எம்.ஜி.ஆர் மன்றம், பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் அணி ,இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, கலைப் பிரிவு மற்றும் கழகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் தங்கள் பகுதிகளில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு மேலும் ஆங்காங்கே உள்ள ஏழை எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற நலத்திட்ட உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!