ஜல்லிக்கட்டு காளைக்கு ஈட்டி குத்து- தட்டிக்கேட்டவருக்கு அரிவாள் வெட்டு
ஜல்லிக்கட்டு காளை (பைல் படம்)
திருச்சி மாவட்டம், சமயபுரம் கீழ ஈச்சம்பட்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஜான் என்பவர் சொந்தமாக நான்கு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை ஜல்லிக்கட்டு காளை திமிலில் ஈட்டியால் குத்தி ரத்தம் வழிகிறதென அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். உடனே அவரது வீட்டின் தோட்டத்து பகுதியில் சென்று பார்த்த போது, ஜல்லிக்கட்டு காளை திமிலில் ஈட்டி பாய்ந்திருப்பதனைக் கண்டு ஜான் அதிர்ச்சி அடைந்தார்.
தனது காளையினை ஈட்டியால் குத்திய அடையாளம் தெரியாத நபரை ஆத்திரத்தில் திட்டியுள்ளார் ஜான் தம்பி ஜான்சன். இதையறிந்த கஞ்சா போதையிலிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ரெங்கராஜ் மகன் சந்தோஷ் என்ற 29 வயதான இளைஞர், ஜான்சனை தலையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினார்.
படுகாயமடைந்த ஜான்சன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதே வேளையில் ஈட்டியால் குத்தியதில் காயமடைந்த ஜல்லிக்கட்டு காளைக்கு அப்பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu