ஜல்லிக்கட்டு பேரவையினர் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி எஸ்.பி.யிடம் புகார்

ஜல்லிக்கட்டு பேரவையினர் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி எஸ்.பி.யிடம் புகார்
X
ஜல்லிக்கட்டு பேரவையினர் மீது திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
மிரட்டல் விடுக்கும் ஜல்லிக்கட்டு பேரவையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி எஸ்.பி.யிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.

திருச்சி, சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவையினர் இன்று புகார் மனு அளித்தனர்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

எங்களது பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவையில் துணை பொது செயலாளராக செயல்பட்டு வரும் கல்லக்குடி காமராஜ். அவரது மகன் பிரேம் காமராஜ் மீது ஜல்லிக்கட்டு பேரவையை சேர்ந்த திருச்சி சோபனாபுரம் ஆனந்த் என்பவர், கடந்த 26.12.2021-ம் ஆண்டு காமராஜுக்கு போன் செய்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். உன்னையும் உன் மகன் பிரேமையும் சத்தமில்லாமல் அடித்து கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

மேலும் 2.01.2022 அன்று மதுரையை சேர்ந்த பி.ஆர். ஜல்லிக்கட்டு பேரவையில் பயணிக்கும் மேலும் ஒருவரான மதன் என்பவர் பிரேம் காமராஜிற்கு போன் செய்து என் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. எதை பற்றியும் கவலைப்பட மாட்டேன். எங்களது ஜல்லிக்கட்டு பேரவை எங்களது இஷ்டப்படி தான் செயல்படும். அது பற்றி கேள்வி கேட்டாலோ அல்லது கணக்கு வழக்கு கேட்டாலோ உன்னையும், உன் அப்பனையும் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். எனவே எஸ்பி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!