ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு கூத்தைப்பார் கிராம மக்கள் மனு

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு கூத்தைப்பார் கிராம மக்கள் மனு
X

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் (பைல் படம்)

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு கூத்தைப்பார் கிராம மக்கள் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராம கமிட்டி தலைவர் சேகர், செயலாளர் நிலவன் ஆகியோர் தலைமையில் கிராம கமிட்டியினர் மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

அவர்கள், மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமாரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், கூத்தைப்பார் கிராமத்தில் ஆண்டு தோறும் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழாவை அடுத்த மாதம் 19-ந்தேதி நடத்த தீர்மானித்துள்ளோம். எனவே அந்த விழாவை தமிழக அரசு விதிமுறைகளின் படியும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படியும் முறையான அனுமதியுடன் நடத்துவோம் என்று உறுதி அளிக்கிறோம். எனவே, ஜல்லிக் கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டுகிறோம் என்று கூறப்பட்டு இருந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!