திருச்சி அருகே பெண்ணிடம் நகை பறித்த இளைஞர்களுக்கு சிறைத்தண்டனை
திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கத் தாலியை பறித்த வழக்கில் இருவருக்கு தலா 7 வருடம் சிறைத்தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு அண்ணா நகர் தொகுதி 3 ஐ சேர்ந்தவர் ரவிக்கண்ணன் மனைவி லதா (வயது 44 ). கடந்த 9 -12 -2016 அன்று வைஷாலி என்பவர் இருசக்கர வாகனத்தை ஓட்ட லதா பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். நவல்பட்டு அண்ணாநகர் கட்டளை மேட்டு வாய்க்கால் கரையில் இவர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அவர்கள் இருவரும் தலையில் தலைக்கவசம் அணிந்திருந்தனர். லதாவின் அருகில் வந்ததும் அவர்கள் மோட்டார் சைக்கிளை மெதுவாக ஓட்டியவாறு கத்தியை காட்டி மிரட்டி லதா கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கத் தாலியை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர். அவர்கள் பறித்து சென்ற தங்க தாலியின் மதிப்பு சுமார் 40,000 ஆகும்.இந்த சம்பவம் தொடர்பாக லதா நவல்பட்டு அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் தங்க தாலி பறிப்பு தொடர்பாக நவல்பட்டு அண்ணா நகர் போலீசார் திருச்சி மேல் அம்பிகா புரத்தைச் சேர்ந்த வெற்றிவேல்(வயது 24 )மற்றும் சங்கிலியாண்ட புரம் கலைஞர் தெருவை சேர்ந்த ஜோன்ஸ் டார்வின் ஆக இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் மீது குற்றப்பத்திரையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை திருச்சி குற்றவியல் தலைமை நீதிமன்ற நடுவர் மீனா சந்திரா இன்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட வெற்றிவேல் மற்றும் ஜோன்ஸ் டார்வின் ஆகிய இருவருக்கும் தல ஏழு வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும்,தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் அவர்கள் ஆறு மாதம் மெய்க்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் தீர்ப்பில் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வழக்கறிஞர் எஸ். ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu