/* */

திருச்சி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.32 கோடி பணம் பறிமுதல் என தகவல்

திருச்சி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.32 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.32 கோடி பணம் பறிமுதல் என தகவல்
X

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற தேர்தல், 2024 அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை செயல்படுத்தும் விதத்திலும், மீறுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 9 குழுக்கள் வீதம் மாவட்டம் முழுவதும் 81 பறக்கும் படை மற்றும் 81 நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் தேர்தல் கண்காணிப்பு பணியில் 16.03.2024 முதல் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 25.03.2024 வரை தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் 138 - மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.40,45,300-ம், 139 - ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.74,500ஃம், 140 - திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.52,68,920-ம், 141-திருச்சிராப்பள்ளி (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.22,73,500-ம், 142-திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2,71,200-ம், 143- இலால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 8,56,670-ம், 144- மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.5,83,270-ம், 145-முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1,05,480-ம், 146 - துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 1,33,690-ம் ஆக மொத்தம் ரூ.1,36,12,530- பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி தொகையில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததன் அடிப்படையில் ரூ.27,58,300- சம்மந்தப்பட்ட நபர்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டது.

மேலும், காவல்துறையினர; மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு 16.03.2024 முதல் 25.03.2024 வரை ரூ.4,67,72- மதிப்பிலான மதுபானம், கஞ்சா, தங்கம் மற்றும் பரிசு பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது எனவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக சம்மந்தப்பட்ட அரசியல் கட்சியினர்மீது இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை மாவட்ட தோ;தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Updated On: 26 March 2024 4:47 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  4. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  6. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  7. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...