திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு கட்டணமில்லா செல்போன் எண் அறிமுகம்

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு கட்டணமில்லா செல்போன் எண் அறிமுகம்
X
திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளுக்கான கட்டமணமில்லா செல் போன் எண்ணை கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டார்.
திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு கட்டணமில்லா செல்போன் எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மல்லிகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் அவர்களின் பிரதிநிதிகள் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு 9342912122 என்ற கட்டணம் இல்லா செல்போன் எண் வெளியிடப்பட்டது. அதனை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிமுகம் செய்து விவசாயிகளிடம் வெளியிட்டார்.கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள பிரச்சினைகள் கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக பேசினார்கள்.

Tags

Next Story