/* */

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ்நிலையம் பற்றி அமைச்சர் நேரு பேட்டி

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ்நிலைய பணி தொடக்கம் பற்றி அமைச்சர் நேரு விரிவான பேட்டி அளித்தார்.

HIGHLIGHTS

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ்நிலையம் பற்றி அமைச்சர் நேரு பேட்டி
X

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் அமைச்சர் நேரு இன்று ஆய்வு செய்தார்.

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கு கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி விட்டு சென்றார். ஆனால் அதன்பின்னர் சுமார் மூன்று மாத காலமாக அந்த இடத்தில் எந்த ஒரு பணியும் நடக்கவில்லை.


இதற்கிடையில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் மண் வளம் இல்லை. அதனால் அங்கு ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படுவது சந்தேகம் என ஒரு பேச்சு திருச்சி பகுதியில் நிலவி வந்தது. வேறு இடத்திற்கு மாற்றப்படுமா?என்ற கேள்வியும் எழுந்தது.

இந்த நிலையில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு இன்று காலை பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் பஞ்சப்பூரில் அமைக்கப்பட இருக்கிறது. இந்த பஸ் நிலையம் தொடர்பான டி.பி.ஆர். எனப்படும் விரிவான திட்ட அறிக்கையை முதலமைச்சர் அவர்களிடம் நேற்று காட்டி விட்டோம் .அதற்கு அவர் ஒப்புதல் அளித்துவிட்டார். எனவே டெண்டர் விடப்படும் நிலைக்கு தற்போது வந்துள்ளது. டெண்டர் விடப்பட்டதும் ஓராண்டு காலத்தில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும் .

இது இது மிகப்பெரிய திட்டமாகும் .ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் முதல்கட்டமாக சுமார் 8 அடி உயரத்திற்கு மணல் அடிக்க இருக்கிறோம். ஒன்றை அடி ஆழத்துக்குத் தோண்டி இருக்கிற மணலை அகற்றிவிட்டு அதன் பின்னர் இந்த மணல் அடிக்கப்படும். இதற்காக சுமார் 37 கோடி ரூபாய் செலவிடப்பட இருக்கிறது.

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் திருச்சி- திண்டுக்கல் சாலை, திருச்சி- மதுரை சாலை, திருச்சி- புதுக்கோட்டை சாலை, திருச்சி தஞ்சாவூர் சாலை ஆகிய ஐந்து தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் அமைய உள்ளது. பஞ்சப்பூர் பகுதியிலிருந்து கரூர் சாலையை இணைக்கும் ரிங்ரோடு அமைப்பதற்கான பணிகளும் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த பணி 18 மாதங்களில் நிறைவடையும். ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை பொறுத்தவரை முதல் கட்ட பணிகள் ரூ.350 கோடியில் நடைபெற இருக்கிறது. ஒரே நேரத்தில் அந்த பஸ் நிலையத்தில் 350 முதல் 450 பஸ்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்படும். இரண்டாம் கட்டமாக பஸ் நிலையம் அருகிலேயே காய்கறி மொத்த மார்க்கெட், வணிக வளாகம், லாரிகள் நிறுத்துவதற்கான டிரக் வளாகம் ஆகியவை அமைக்கப்பட இருக்கிறது. வணிக வளாகத்தில் சுமார் 300 கடைகள் கட்டப்படும். வணிக வளாகம் மட்டும் 20,000 சதுர அடியில் அமைக்கப்பட இருக்கிறது.


காய்கறி மொத்த மார்க்கெட் அமைவதன் மூலம் இந்த பகுதியில் பொருட்களை ஏற்றி இறக்குதல் மற்றும் பல்வேறு வேலைகள் தொடர்பாக தினமும் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். திருச்சி நகரின் வளர்ச்சி என்பது இனி மணப்பாறை, விராலிமலையை நோக்கித்தான். திருச்சி திண்டுக்கல் சாலை ரிங் ரோடு வரை ரூ .350 கோடியில் விரிவு படுத்தப்பட இருக்கிறது.காவிரி பாலம் புதியதாக கட்ட இருக்கிறது.

திருச்சி பெருநகர குழுமம் அமைப்பது பற்றி முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறேன். நிச்சயமாக பெருநகர குழுமம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

திருச்சி ஜங்ஷன் அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலம் கட்டுவதற்கு ராணுவ அமைச்சகத்தின் அனுமதி எனவே தொங்கு பாலம் கட்டுமான பணி இன்னும் 10 நாட்களில் தொடங்கப்படும்.

இவர் அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், ஸ்டாலின் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 April 2022 3:13 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...