திருச்சி அருகே மருத்துவ துறை சார்பில் சர்வதேச யோகா தினவிழா

திருச்சி அருகே மருத்துவ துறை சார்பில் சர்வதேச யோகா தினவிழா
X

திருச்சி அருகே அதவத்தூரில் மருத்துவ துறை சார்பில் சர்வதேச யோகா தினவிழா நடந்தது.

திருச்சி அருகே மருத்துவ துறை சார்பில் சர்வதேச யோகா தினவிழா நடைபெற்றது.

திருச்சி மாவட்ட மருத்துவத்துறை சார்பாக சர்வதேச யோகா தின விழா இன்று அந்தநல்லூர் ஒன்றியம் திருப்பராய்த் துறை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு திருவரங்கம் கோட்டாட்சியர் சிந்துஜா தலைமை தாங்கினார்.

மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். கி.ஆ.பெ.மருத்துவ கல்லூரி டீன் திரு.நேரு, மா வட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் லெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திரா கணேசன் கல்லூரி தாளாளர் ராஜசேகரன் கல்லூரி மாணவர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.திருவரங்கம் வட்டாட்சியர்கள், அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அந்தநல்லூர் ஒன்றியக் குழுத் தலைவர் துரைராஜ் ,ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் அந்த நல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.திருச்சி மாவட்ட அரசு சித்த மற்றும் இயற்கை மருத்துவர்கள் அனைவரும் பங்கு பெற்றனர். மருத்துவர் பிரித்தி புஷ்கரணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!