திருச்சி சிஇஒ அலுவலகம் முன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் போராட்டம்

திருச்சி சிஇஒ அலுவலகம் முன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் போராட்டம்
X

திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்  இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி சிஇஒ அலுவலகம் முன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

திருச்சியில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311 ல் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி 19ந்தேதி சென்னையில் (டிபிஐ )வளாகத்தில் கடந்த 7நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.இதுவரை அரசு கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து இறுதி முடிவு செய்யாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாநில பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களை கைது செய்வதை கண்டித்து 26ந் தேதி முதல் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்று வருகிறது .

அதேபோல் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயலாளர் கு.நவீன்குமார் அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட தலைவர் சந்தோஷ் குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் குசேலன், ரெங்கராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட துணைச் செயலாளர்கள் மு.விஜயராகவன், விஜயகுமார், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311 ல் கூறியது போல் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags

Next Story
why is ai important to the future