திருச்சி இந்திரா காந்தி கல்லூரியில் தேசிய சிந்தனை கழக முப்பெரும் விழா
முப்பெரும் விழாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வேடம் அணிந்த மாணவி.
தேசிய சிந்தனை கழக முப்பெரும் விழா மாநில கமிட்டி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாள் விழா நேற்று காணொலி மூலம் நடைபெற்றது.
திருச்சி இந்திராகாந்தி கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் முப்பெரும் விழா மாநில கமிட்டி உறுப்பினர் சந்திரசேகரன் வரவேற்புரை வழங்கினார். வி.ஐ.டி. நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் முப்பெரும் விழா கமிட்டி தலைவர் ஜி.வி.செல்வம் தலைமை உரையாற்றினார். ஊடகவியலாளர் மற்றும் முப்பெரும் விழா மாநில கமிட்டியின் உறுப்பினர் கோதை ஜோதிலட்சுமி சிறப்புரையாற்றினார். "தேசம் நேசித்ததலைவன்" என்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் "வாழ்க்கை வரலாறு" அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நூலை வெளியிட்டு விழாபேருரை ஆற்றினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வேல்ராஜ் இப்புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் இந்திராகாந்தி கல்லூரி மாணவிகள் நேதாஜி வாழ்க்கையில் நடந்த சுவாரஷ்யமான சம்பவங்களில் சில காட்சிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கி நாடகமாக நடித்து காண்பித்தனர்.
இவ்விழாவினை தேசிய சிந்தனைக்கழகத்தின் மாநில பொறுப்பாளர் ராஜேந்திரன் ஒருங்கிணைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu