இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மகளிர் அணி மண்டல ஆலோசனை கூட்டம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மகளிர் அணி மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி காயிதே மில்லத் அரபி பாடசாலையில் நடைபெற்றது. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஆயிஷா தலைமை தாங்கினார்.இதில் மெஹருன்னிஷா ஆலிமா வரவேற்புரையாற்றினார். மகளிர் அணி மாவட்ட துணை தலைவர் பீருன்னிசா தொகுப்புரை வழங்கினார்.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட மகளிர் லீக் மாவட்ட தலைவர் முனைவர்.பைரோஸ் துவக்க உரை நிகழ்த்தினார். திருச்சி மகளிர் லீக் மாவட்ட செயலாளர் ரஹிமா ஷாகுல், மற்றும் புதுக்கோட்டைமாவட்ட அமைப்பாளர் சம்சல் பேகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.புதுக்கோட்டை மாவட்ட தலைவர் டாக்டர் ஹாஜி .முகம்மதுஅஷ்ரப்அலி, பொருளாளர் அகமது பாட்சா, பெரம்பலூர் மாவட்ட தலைவர் அப்துல் ஹாதி, மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஹபிபுர் ரஹ்மான் ஆகியோர் மகளிர் அணியின் செயல்பாடுகள் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினார்கள்.
இந்த மண்டல நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மகளிர் லீக் தேசிய தலைவரும், சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினருமான ஹாஜியானி.பாத்திமா முஸப்பர் கலந்து கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் வரலாறு குறித்தும் பெண்களின் பங்களிப்பு குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதில் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட மகளிர் லீக் நிர்வாகிகளின் கலந்துரையாடல் நடைபெற்று பின்னர் மாவட்ட வாரியாக அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
மேலும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தும், பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் எனவும்,பள்ளி கல்லூரிகளில் மனநல ஆலோசனை மையங்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும்,கஞ்சா மற்றும் போதை பழக்கத்தை தடுத்திட தீவிர கண்காணிப்பு ஏற்படுத்த வேண்டும் எனவும்,பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும், உள்ளாட்சி தேர்தலில் முஸ்லிம் லீக்கின் ஏணி சின்னத்தில் வெற்றி பெற்ற மகளிர் அணியின் நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
திருச்சி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம்லீக் பொருளாளர் ஹுமாயூன்,நிர்வாகிகள் சையது ஹக்கிம், சேக் முகமது கௌஸ்,சையது முஸ்தபா,சம்சுதீன்,அமீருத்தீன்,பைசூர் ரஹ்மான், திருச்சி மாவட்ட மகளிர்அணி நிர்வாகிகள் பாத்திமாபேகம்,ஜன்னத்துல் பிர்தவ்ஸ், ஜெயரானி ஃபெலிஸிட்டா, ஹலிமுன்னிஷா,ரெஜினா பேகம்,ரஷிதா பேகம், ஷமீம் பானு, கதீஜா பீவி, புதுக்கோட்டை மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஆயிஷா கனி, மெகராஜ் கனி மகாலக்ஷ்மி, மற்றும் திரளான மகளிர் அணி நிர்வாகிகள், திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மகளிர் லீக் மகளிர் அணி மாவட்ட பொருளாளர் ஆரிபா நன்றி உரை நிகழ்த்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu