இஸ்ரேலிற்கு எதிராக திருச்சியில் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
திருச்சியில் இஸ்ரேலிற்கு எதிராக இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் ஒரு மாதமாக போர் நடந்து வருகிறது. இதில் பாலஸ்தீன அப்பாவி பொதுமக்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவிகள் கொல்லப்பட்டு வருகிறார்கள்.
எனவே பாலஸ்தீன மக்களை அடிமைப்படுத்த நினைக்கும் இஸ்ரேலை கண்டித்தும் உடனடியாக ஐநா சபை போர் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளக் கோரியும் இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 11.00மணிக்கு திருச்சி ஜங்ஷன் வழிவிடும் வேல் முருகன் கோவில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் பார்வதி தலைமையில், மாவட்டச் செயலாளர் அஞ்சுகம் முன்னிலையில் ஆயிஷா, ஈஸ்வரி, வித்யா, முத்துலட்சுமி, விமலா, ஜான்சி ராணி , கண்டன உரையில் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் எம் செல்வராஜ் ஏ ஐ டி யு சி மாவட்ட பொதுச் செயலாளர் க. சுரேஷ், கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ் சிவா, மாவட்ட துணைச் செயலாளர் செல்வகுமார்,மாணவர் பெருமன்ற மாநில பொருளாளர் க இப்ராஹிம், கட்சியின் மேற்கு பகுதி செயலாளர் இரா சுரேஷ் முத்துசாமி, மணிகண்டம் ஒன்றிய செயலாளர் எம் ஆர் முருகன் மேலும் மேற்கு பகுதி இளைஞர் பெருமன்றத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், இஸ்ரேலிற்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu