இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ்கார்த்திக் 4-ந்தேதி திருச்சி வருகை

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ்கார்த்திக் 4-ந்தேதி திருச்சி வருகை
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தினேஷ்கார்த்திக் 4-ந்தேதி திருச்சி சந்தானம் வித்யாலயா பள்ளிக்கு வருகிறார்.

திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானங்களை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ்கார்த்திக் நாளை மறுநாள் 4-ந்தேதி திறந்து வைக்கிறார்.

இது குறித்து பள்ளி தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன் இன்று நிருபர்களிடம் கூறும்போது


கல்வியுடன் விளையாட்டு, கலை போன்ற பன்முக திறமைகளை வளர்ப்பதற்காக கல்வியாளர் சந்தானத்தின் முயற்சியால் திருச்சியில் பல பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டது. திருச்சி சந்தானம் வித்யாலயா பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 12-வது வரை 600 மாணவ, மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.

மாணவர்களின் விளையாட்டு திறமையை வளர்ப்பதற்காக சந்தானம் வித்யலயாவில் கிரிக்கெட், கால்பந்து, கூடைபந்து மைதானங்கள் மற்றும் 4 கிரிக்கெட் பயிற்சி ஆடுகளம் உருவாக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட், கால்பந்து மைதானங்கள் தரமான புற்களை கொண்டு (டர்ப்) அமைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை சேர்ந்த நிபுணர்கள் சிறப்பாக உருவாக்கியுள்ளனர். மழை நீர் எளிதாக வெளியேறும் வகையில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. வில்வித்தை, கைப்பந்து, எறிபந்து போன்ற விளையாட்டுக்களுக்கான ஆடுகளம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதனை நாளை மறுநாள் (மார்ச் 4) திறந்து வைத்து பள்ளி விளையாட்டு தின விழாவில் மாணவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ்கார்த்திக் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்குகிறார். இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வி துறை தலைவர் காளிதாசன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர் என்றார்.

நிகழ்ச்சியில் பள்ளி துணை முதல்வர் ரேகா, உடற்கல்வி இயக்குனர் கார்த்திகேயன், செய்தி தொடர்பாளர் ரேவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story