அமைச்சர் கே.என்.நேருவிடம் வாழ்த்து பெற்ற இந்திய ராணுவ வீராங்கனைகள்

அமைச்சர் கே.என்.நேருவிடம் வாழ்த்து பெற்ற இந்திய ராணுவ வீராங்கனைகள்
X

வாகன பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பெண் ராணுவ வீராங்கனைகள் திருச்சியில் அமைச்சர் நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அமைச்சர் கே.என்.நேருவிடம் பெண் சமத்துவத்திற்காக பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ராணுவ வீராங்கனைகள் வாழ்த்து பெற்றனர்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பெண் ராணுவ வீராங்கனைகள் ஒரு குழுவாக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை வாகன பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

பெண் சமத்துவத்திற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் புறப்பட்டுள்ள இந்த குழுவினர் இன்று திருச்சி வழியாக சென்றனர். அப்போது அவர்கள் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்வின் போது திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story