திருச்சி 12-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் இறுதி கட்ட பிரச்சாரம்

திருச்சி 12-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் இறுதி கட்ட பிரச்சாரம்
X

இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் திருச்சி 12வது வார்டு சுயேச்சை வேட்பாளர் பாலமுருகன்.

திருச்சி மாநகராட்சி 12-வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 12-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக கோ. பாலமுருகன் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்தது முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாலமுருகன் இன்று வரை பம்பரமாக தனது ஆதரவாளர்களுடன் வீடு, வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி வாக்கு சேகரித்து வருகிறார்.


இந்நிலையில் இன்று பழைய கரூர் ரோடு, சுப்பிரமணிய சுவாமி கோயில் தெரு, நாடார்தெரு, சஞ்சய் காந்தி நகர், பாலகிருஷ்ணன் நகர், வி.என்.நகர் கரூர் பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகளில் ஓட்டு கேட்டு இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவருடன் குடமுருட்டி கண்ணன், முன்னாள் கவுன்சிலர் முருகேசன், பஜார் மைதீன், ஆட்டோபையா, சிந்தை கந்தன், பழக்கடை செந்தில், தண்ணீர்மலை, மணிகார்ஸ் செந்தில், ராதா உள்ளிட்ட அப்பகுதியைச்சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!