திருச்சியில் அனைத்து கட்சியினர் பங்கேற்ற சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
திருச்சியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாநகராட்சி முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்டு தேசிய கொடி ஏற்றினார்.
திருச்சியில் அனைத்து கட்சியினர் கொண்டாடிய சுதந்திர தினவிழாவில் மாநகராட்சி முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்டு தேசிய கொடி ஏற்றினார்.
திருச்சியில் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட காவல் ஆயுத படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசிய கொடி ஏற்றி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
மேலும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் சுதந்திர தின விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் திருச்சி காஜாமலை பகுதியில் இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சங்கம் (எச்.எம்.கே.பி) சார்பில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. எச்எம்கேபி அமைப்பின் மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி தலைமை தாங்கினார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில செயலாளர் தமிமுன் அன்சாரி முன்னிலை வகித்தார்.
இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்டு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடிஏற்றி மரியாதை செலுத்தினார்.
தி.மு.க. சார்பில் சுகுமார், அ.தி.மு.க. சார்பில் ரவி, பாரதீய ஜனதா கட்சியின் வர்த்தக பிரிவு செயலாளர் கிரி பிரசாத், மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள், பொறியாளர் முரளி தரன், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி செல்வராஜ், போலீஸ் அதிகாரி சுரேஷ்குமார்உள்பட அனைத்து கட்சி பிரமுகர்கள்,குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முன்னதாக அனைவரும் வேற்றுமையிலும் ஒற்றுமை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu