/* */

திருச்சி ஜே.கே.நகர் விரிவாக்க பகுதியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

திருச்சி ஜே.கே.நகர் விரிவாக்க பகுதியில் சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி ஜே.கே.நகர் விரிவாக்க பகுதியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
X
திருச்சி ஜே.கே.நகர் விரிவாக்க பகுதியில் நடந்த சுதந்திர தினவிழாவில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

திருச்சி ஜே.கே. நகர் விரிவாக்க பகுதி மக்கள் நலச் சங்கம் சார்பில் இன்று நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நடைபெற்ற விழாவில் சங்கத்தின் மூத்த உறுப்பினர் நெகமதுல்லா தேசிய கொடியினை ஏற்றினார். அப்போது தேசியக்கொடிக்கு மரியாதை செய்யப்பட்டது.

தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை துணை இயக்குனர்(ஓய்வு) இப்ராஹிம்சரீஃப் நாம் பேணி காக்க வேண்டிய சுதந்திரத்தின் சிறப்புகள், அதனைப் பெறுவதற்கு காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் அனுபவித்த கொடுமைகள், அதன் பெருமைகள், நாட்டின் இறையாண்மையை காக்க எதிர்கால சந்ததியினர் ஆற்ற வேண்டிய பணிகள், மதசார்பின்மை அரசின் சிறப்புகள் பற்றி சிறப்புரையாற்றினார்.


இதனை தொடர்ந்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் சங்கத்தின் கௌரவ தலைவர் ஓய்வு பெற்ற மின்வாரிய கோட்ட பொறியாளர் கண்ணன், சங்க தலைவர் திருஞானம், அமைப்புச் செயலாளர் குலோத்துங்கன், பொருளாளர் சாமுவேல் சதீஷ், இணை செயலாளர் ஜெடிக்ஸ் மற்றும் நிர்வாகிகள் அச்சுதன், குகன், முத்துக்குமார், மன்சூர் உள்பட ஏராளமான குடியிருப்பு வாசிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Aug 2022 7:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது