திருச்சியில் மக்கள் நல சங்கம் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
திருச்சி ஜே.கே. நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கம் சார்பில் இன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
திருச்சி ஜே.கே. நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கம் சார்பில் 77 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருச்சி மாநகராட்சி நான்காவது மண்டலம் 61 வது வார்டில் அமைந்துள்ளது ஜே.கே. நகர் விரிவாக்க பகுதி. இந்நகரில் உள்ள ஜே.கே. நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கம் சார்பில் நாட்டின் 77 வது சுதந்திர தின விழா இன்று காலை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஜே.கே. நகர் விரிவாக்க பகுதி நான்கு ரோடு சந்திப்பு சாலை அருகில் நடைபெற்ற இவ்விழாவிற்கு சங்கத்தின் தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். சங்க ஆலோசகரும் தமிழ்நாடு மின்வாரியத்தின் முன்னாள் ஓய்வு பெற்ற கோட்ட பொறியாளருமான கண்ணன், சங்க பொருளாளர் சாமுவேல் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் தினகரன் நாளிதழின் ஓய்வு பெற்ற ஆசிரியரும், சிறுகதை எழுத்தாளருமான இரா. பவுன்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து விழாவில் பங்கு பெற்ற குடியிருப்பு வாசிகள் மற்றும் சிறுவர் சிறுமிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
விழா முடிவில் நன்றி கூறுவதற்கு முன்பாக தலைவர் திருஞானம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சங்கத்தின் நடவடிக்கைகள் அதன் மூலம் கிடைக்கப் பெற்ற நன்மைகள், தற்போது ஜே,கே. நகர் விரிவாக்க பகுதியில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் சாலை அமைப்பு பணிகள், மழை நீர் வடிகால் பணிகள் எதிர்காலத்தில் சங்கம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ள பணிகள் தொடர்பாக விரிவாக பேசினார். விழாவில் குடியிருப்பு வாசிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu