திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்தி்ர தினவிழா

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்தி்ர தினவிழா
X

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டது.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்தி்ர தினவிழா தேசிய கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான தியாகி அருணாச்சலம் மன்றத்தில் 78வது சுதந்திர தின விழா இன்று தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமை வகித்தார்.

மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, தேசிய செயலாளர் கிறிஸ்டோபர் திலக், மாநிலத் துணைத் தலைவர் சுப.சோமு, மாவட்ட பொருளாளர் முரளி, கோட்டத் தலைவர்கள் வெங்கடேஷ் காந்தி, பிரியங்கா பட்டேல், ஜெயம் கோபி, அழகர், ராஜா டேனியல், இஸ்மாயில், தர்மேஷ், மலர் வெங்கடேஷ், எட்வின் ராஜ், மாவட்ட நிர்வாகிகள் எஸ் வி படேல், ஷேக் தாவூத், அன்பு ஆறுமுகம், பாலாஜி நகர் பாலு, கலியபெருமாள், உறந்தை செல்வம், கருப்பையாடாக்டர் பாலசுப்பிரமணியன், திலகர், பிரிவு மாவட்ட தலைவர்கள் ஐ.என்.டி.யு.சி வெங்கட் நாராயணன், அமைப்புசாரா மகேந்திரன், ஆராய்ச்சி துறை பாண்டியன், சமூக ஊடகப்பிரிவு அரிசி கடை டேவிட், விஜய் பட்டேல், கார்த்திக், கிளமெண்ட், ஊடகப்பிரிவு செந்தில்குமார், தினேஷ், ஐ .என். டி. யு சி.வேலாயுதம், பாலசுப்ரமணியன், அமைப்புசாரா சம்பத், மகிளா காங்கிரஸ் கோகிலா, அன்பு ரோஸ், நிஷா, அமுதா, கலைப்பிரிவு ராகவேந்திரன், அம்ஜத், கிருஷ்ணா அய்யர், ஆரிப், ரபிக், அருள், காட்டூர் செல்வராஜ், சேகர், ராஜ்குமார், மோகன், அரசு போக்குவரத்து கழக வடிவேல், எழிலரசன், அண்ணாதுரை, மூர்த்தி, சையது இப்ராஹிம், நடராஜன், மாசிலாமணி, முகமது அம்ஜத், காமராஜ், சண்முகம், ரயில்வே ரமேஷ், திருவரங்கம் ராஜாங்கம், நடராஜ், பன்னீர்செல்வம், ஜீவா, சாய்நாதன் , விமல், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தொடர்ச்சியாக ஜங்ஷன் கோட்டம் வார்டு எண் 51, அரியமங்கலம் கோட்டம் வார்டு எண் 35, காட்டூர் கோட்டம் வார்டு எண் 39, கைலாஷ் நகர் நலச்சங்கம், விண்ணகர் நலச்சங்கம், பாலாஜி நகர் விஸ்தரிப்பு நலச்சங்கம், சுப்ரமணியபுரம் கோட்டம் வார்டு எண் 46 உள்ளிட்ட பகுதிகளில் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியாக ஜங்ஷன் கோட்டம் சார்பாக தேசிய கோடி ஏந்திய இரு சக்கர வாகன பேரணி உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியிலிருந்து இரயில்வே சந்திப்பு அமரர் ராஜீவ் காந்தி சிலை - தலைமை தபால் நிலையம் மகாத்மா காந்தி சிலை - முத்தரையர் சிலை - வ உ சிதம்பரனார் சிலை - மேஜர் சரவணன் நினைவு சின்னம் வழியாக மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலையில் நிறைவுபெற்றது.

Tags

Next Story
ai solutions for small business