திருச்சி மாநகராட்சி உறையூர் நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா

திருச்சி மாநகராட்சி  உறையூர் நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா
X

திருச்சி மாநகராட்சி உறையூர் நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

திருச்சி மாநகராட்சி உறையூர் நடுநிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

திருச்சி மாநகராட்சி வார்டு எண் 23உறையூர் கிழக்கு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி தேசிய கொடியினை அப்பகுதியின் மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ் ஏற்றி வைத்து உரையாற்றினார்.

மகாத்மா காந்தி,இந்திரா காந்தி, ஜவர்கலால் நேரு, பாரதமாதா, விவேகானந்தர், கட்டபொம்மன், வேலு நாச்சியார் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் வேடம் அணிந்து சுதந்திர தின எழுச்சி உரையாற்றினர். போட்டியில் பங்கேற்றவர்களுக்கு 24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி பரிசு பொருட்களை வழங்கினார். இளநிலை பொறியாளர் ரமேஷ் மற்றும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பெற்றோர் ஆசிரியர் பெருமக்கள் விழாவில் பங்கேற்றனர்

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?