12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி திருச்சி வருமான வரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி திருச்சி வருமான வரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் வருமான வரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி திருச்சி வருமான வரித்துறை அலுவலக ஊழியர்கள் உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வருமான வரித்துறை ஊழியர்கள் கூட்டமைப்பின் 31-வது மாநாடு அமைப்பின் தலைவர் வெங்கடேசன் தலைமையில் தெலுங்கானாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ICT எனப்படும் inter Charge Transfer தொடர்பாக வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை ஒரே மாதிரியாக செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும், அனைத்து ஆய்வாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி போராட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் அமைப்பின் செயலாளர் ஜெகதீசன் தலைமையில், சரக செயலாளர் சுரேஷ், கிளைச் செயலாளர் ஜான் ரசல், கிளைத் தலைவர் பிரசாத் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதிய உணவு இடைவேளையின் போது நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு முழக்கங்கள் எழுப்பினர்.

Tags

Next Story