திருச்சியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா குத்துவிளக்கேற்றி துவக்கி வைப்பு

திருச்சியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா குத்துவிளக்கேற்றி துவக்கி வைப்பு
X

திருச்சியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

திருச்சியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் சக்தி மற்றும் வளர்ச்சி தரும் உணவுகள் அடங்கிய ஊட்டச்சத்து கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மேலும் அங்கன்வாடி மையங்களுக்கு ஊட்டச்சத்து உணவுகளையும், மரக்கன்றுகளையும் வழங்கினார். மாவட்ட திட்ட அலுவலர் ரேணுகா உள்பட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!