திருச்சியில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
திருச்சியில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறந்து பழங்கள் வழங்கப்பட்டது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் கொடுமையில் இருந்து தப்ப முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். வசதி படைத்தவர்கள் வெயிலுக்கு பயந்து வெளியில் வருவதே இல்லை. அப்படியே வந்தாலும் ஏசி காரில் வந்து விட்டு செல்கிறார்கள். வீட்டிலும் ஏசி தான் என்பதால் அவர்களுக்கு பிரச்சினை இல்லை.
இவர்களது வாழ்க்கை இப்படி என்றால் அன்றாடம் காய்ச்சிகள் வெயிலில் தான் தங்களது வாழ்வாதாரத்திற்காக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பல்வேறு இடங்களிலும் வேலை செய்பவர்கள் வெயிலில் நடமாடி தான் ஆக வேண்டிய நிலை உள்ளது.
அவர்களுக்காக அரசியல் கட்சிகள் சார்பில் நீர்மோர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகிறது. திமுக ,அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் நீர் மோர் பந்தல் திறப்பில் அதிக அக்கறை காட்டி வருகின்றன. இந்த நீர்மோர் பந்தல்களில் பழரசங்கள் மற்றும் பல்வேறு விதமாக பழங்களும் வினியோகம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலைய ஏஐடியுசி தொழிற்சங்க தலைமையிலான வாடகை கார் ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோடை கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா இன்று காலை சங்கத்தின் கௌரவ தலைவர் ஏர்போர்ட் ராஜா தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஏஐடியுசி பொது செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான க.சுரேஷ் இதனை திறந்து வைத்து நீர்மோர் வழங்கும் பணியை தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவா ,திராவிட முன்னேற்றக் கழக வன்னை அரங்கநாதன்,கார் ஓட்டுநர் சங்கத்தின் தலைவர் செந்தில் ,செயலாளர் தர்மா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu