திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நடைபயண இயக்கம் துவக்கம்

திருச்சியில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பிரச்சார நடைபயண இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது.
மத்தியில் உள்ள பிஜேபி அரசை அகற்றக்கோரி திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நடைபயண இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது.
பி.ஜே.பி.யை அகற்றி நாட்டை காப்போம், மாற்றத்தை நோக்கி...என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நடைபயண இயக்கம் இன்று 05/05/2023 வெள்ளிக்கிழமை திருச்சி உறையூரில் நடைபெற்றது.கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் எம். செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். சிவா வரவேற்புரை ஆற்றினார். ஏ.ஐ.டி.யூ.சி .மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பு செய்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கலந்து கொண்டு நடைபயண இயக்கத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். தமிழக நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே .என் .நேரு இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பத்மாவதி ,திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் ,தி.மு.க .மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, ம.தி.மு.க மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு,இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் வி. ஜவகர், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கே. என். அருள்,மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் பைஸ்அஹமது, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில குழு உறுப்பினர்ஞான தேசிகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் கே. எம் கே. அபிபூர் ரகுமான் மாவட்டதுணைச் செயலாளர் சி. செல்வகுமார் மாவட்ட பொருளாளர் சொக்கி. சண்முகம், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சிவசூரியன், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் எம். செல்வக்குமார் உள்ளிட்டவர்கள் உரையாற்றினார்கள்.
கட்சியின் பகுதி குழு செயலாளர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தார்கள்.நடைபயண இயக்கம் உறையூர் குறத்தெருவில் துவங்கி பாளையம் பஜார், நாச்சியார் கோவில் ,பாண்டமங்கலம் முஸ்லிம் தெரு வழியாக பாண்டமங்கலம் அரச மரத்தடியில் நிறைவு பெற்றது .மாநில செயற்குழு உறுப்பினர் பத்மாவதி அங்கு நடைபயண பிரச்சாரத்தை முடித்து வைத்து உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கட்சியின் பகுதி குழு செயலாளர்கள், இடைக் குழு செயலாளர்கள் ,மாவட்ட குழு உறுப்பினர்கள் ,இளைஞர் பெருமன்றம், மாணவர் பெருமன்றம்,மாதர்சங்கம் கிளைச் செயலாளர் உள்ளிட்டவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள். நடைபயண இயக்கத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டு உள்ளது.
நாளை 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை திருச்சி மாநகரில் அந்தந்த பகுதி குழுக்கள் சார்பில் நடைபயண இயக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும். பத்தாம் தேதி வரை தொடர்ந்து இயக்கத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu