விழாக்களில் மீதமாகும் உணவுகளை காரில் எடுத்து சென்று வழங்கும் சேவை துவக்கம்
திருச்சியில் விழாக்களில் மீதமாகும் உணவை பசியில் வாடுவோருக்கு பகிர்வதற்காக கார் வாங்கி முதல் உணவை வழங்கும் சேவையை தொடங்கி உள்ளனர்.
நமது நாடான இந்தியாவில் திருமணம், பிறந்த நாள் மற்றும் குடும்ப விழாக்களில் முக்கிய இடம் பெறுவது உணவு. அதுவும் அறுசுவை உணவு. விழாக்களில் உணவு நன்றாக இருந்தால் பாராட்ட மனம் வராது என்றாலும் குறை சொல்வதற்கு தயங்க மாட்டார்கள். இதன் காரணமாக குடும்ப விழாக்களில் உறவினர்களால் அடிதடி தகராறு ஏற்பட்டு இறுதியில் கொலையில் முடிவதும் உண்டு.
இது ஒரு புறம் இருக்க எதிர்பார்ப்பிற்கு அதிகமாக உணவு தயாரிக்கப்படடு விட்டால் அண்டா அண்டாவாக மீதும் ஆகி விடுவதும் உண்டு. இப்படி ஒரு சூழல் ஏற்படும் நேரத்தில் மீதமான உணவினை என்ன செய்வது, எப்படி டிஸ்போஸ் என தெரியாமல் விழா நடத்துவோர் திணறுவது உண்டு.இதற்கு காரணம் விழா நடத்தி முடித்த அசதி அவர்களுக்கு இருக்கும்.
இதன் காரணமாக சில நேரங்களில் மீதமாகும் உணவுகள் குப்பை தொட்டிக்கு நேரடியாக சென்று விடுவதும் உண்டு. இப்படி விழாக்களில் மீதமாகும் உணவை எப்படி வழங்குவது தெரியாமல், உணவை எடுத்து செல்ல வாகனம் இல்லை என்று தவிர்ப்பதற்கு அவிந்தன் போலீஸ் அகாடமி நிறுவனர் அவிந்தன் கார் வாங்கி உள்ளார்.
இன்று 17.01.24 முதல் சேவையை மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம், முன்னாள் ஏ. டி .எஸ். கோவிந்தசாமி, கோ.ஜீவா ஆகியோர் மாக்மாஸ் டிரஸ்ட்டில் நடந்த விழாவில் மீதம் இருந்த உணவை வாங்கி கிராப்பட்டியில் உள்ள கங்காரு கருணை இல்லத்துக்கு வழங்கி முதல் சேவையை தொடங்கி வைத்தனர்.
இதன் முலம் திருச்சியில் நடக்கும் விழாகளில் மீதமாகும் உணவை 83009 02015, 9962255282 என்ற எண்களுக்கு அழைத்தால் இலவச காரில் வந்து எடுத்துக் கொண்டு உணவு தேவைபடுவருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உணவின் சுவை ருசிப்பதை விட பகிர்வதில் தான் அதிகம் என்ற உண்மையும் இந்த சேவையின் மூலம் உலகிற்கு எடுத்து வைக்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu