திருச்சியில் இன்று கொரோனாவுக்கு புதிதாக 444 பேர் பாதிப்பு

திருச்சியில் இன்று கொரோனாவுக்கு புதிதாக 444 பேர் பாதிப்பு
X

பைல் படம்.

திருச்சியில் இன்று கொரோனாவுக்கு புதிதாக 444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனர். இதில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 47 பேர் மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர்.

திருச்சியில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றுக்கு யாரும் பலி இல்லை. தற்போது வரை 2 ஆயிரத்து 88 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் இதுவரை மொத்த கொரேனா பாதிப்பு 81 ஆயிரத்து 102 ஆக உள்ளது. இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண் ணிக்கை 1,104 ஆக உள்ளது.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி