திருச்சியில் ரூ.6.65 மோசடி செய்தவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
திருச்சி மாநகர காவல் ஆணையராக கார்த்திகேயன் திருச்சி பொறுப்பேற்றது முதல் சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகள், பணமோசடி செய்வோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய தக்க அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
கடந்த 29.07.22-ம்தேதி திருச்சி மாநகரக் குற்றப்பிரிவில் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்ததில் லட்சுமிகாந்த் என்பவர் தனியார் வங்கியில் நகை அடகு பிரிவில் வேலை பார்ப்பதாகவும், தனது வங்கியிலும் மற்ற வங்கியிலும் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த தங்க நகைகள் ஏலத்திற்கு வரும்போது தெரிந்த ஆட்களை வைத்து ஏலம் எடுத்து அதை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்து வரும் லாபத்தில் கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை கூறி மூளை சலவை செய்து ரூ.62,50,000- பணம் பெற்றதாகவும், புகார்தாரர் பணத்தை திருப்பி கேட்டபோது பணமும், கமிஷனும் திருப்பி தராமல் அவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாக கொடுத்த புகாரின்பேரில் லட்சுமிகாந்த் மீது வழக்கு பதிவு செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் லட்சுமிகாந்த் மீது திருச்சி மாநகரக் குற்றப்பிரிவில் தில்லைநகர் ஓட்டல் உரிமையாளரிடம் ஆசைவார்த்தை கூறி ரூ.4.80கோடியும், காந்திமார்க்கெட் மஹாலெட்சுமிநகரை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1.20கோடியும், வருமானவரி ஆலோசகரிடம் ரூ.62லட்சமும் ஆக மொத்தம் ரூ.6.65கோடி பணத்தையும், மோசடி செய்ததாக 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
எனவே, லட்சுமிகாந்த் என்பவர் தொடர்ந்து தனிநபர்களிடம் ஆசை வார்த்தைகூறி பணமோசடி குற்றங்களில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட நபரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள லட்சுமி காந்திடம் குண்டர் தடுப்பு சட்டம் ஆணை சார்வு செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu