திருச்சியில் மேயர் அன்பழகன் நடத்தினார் 'மக்களை தேடி மாநகராட்சி முகாம்'

திருச்சியில் மேயர் அன்பழகன் நடத்தினார் மக்களை தேடி மாநகராட்சி முகாம்
X
திருச்சி காட்டூரில் மக்களை தேடி மாநகராட்சி முகாமினை மேயர் அன்பழகன் நடத்தினார்.
திருச்சியில் மேயர் அன்பழகன் நடத்தினார் ‘மக்களை தேடி மாநகராட்சி முகாம்’ குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்தினார்.

தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி திருச்சி மாநகராட்சி தொடர்பான மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் மக்களை தேடி மாநகராட்சி முகாம் காட்டூர் கைலாஷ் நகர் சந்தோஷ் மஹாலில் இன்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் பயனாளிகளுக்கு கட்டிட அனுமதி , சொத்து வரி பெயர் பெயர் மாற்றம், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆணைகளை வழங்கினார். இந்த முகாமில் துணை மேயர் திவ்யா, மண்டலக்குழுத் தலைவர் மதிவாணன், நகரப் பொறியாளர் சிவபாதம், துணை ஆணையர் தயாநிதி, மாமன்ற உறுப்பினார்கள் , மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!