திருச்சியில் 2 வழிப்பறி ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

திருச்சியில் 2 வழிப்பறி ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
X
திருச்சியில் 2 வழிப்பறி ரவுடிகள் மீது கமிஷனர் உத்தரபுபடி குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

திருச்சி செந்தண்ணீர்புரம் முத்துமணி டவுன் ஆஞ்சநேயர் அருகில் ஒரு பெட்டிக்கடை உள்ளது. இந்தப் பெட்டி கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்கிற குண்டுமணி (வயது 27), அய்யப்ப மணிகண்டன் (வயது 27) ஆகியோர் ரூ. 1100 வழிப்பறி செய்து கொண்டு ஓடினர் .

இதுபற்றி அளித்த புகாரின் அடிப்படையில் பொன்மலை போலீசார் இருவரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த ரவுடிகள் இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதால் அவர்கள் மீண்டும் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது என்பதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு வருடம் எந்தவித விசாரணையுமின்றி சிறையில் அடைக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினேஷ் மற்றும் அய்யப்ப மணிகண்டனிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story