திருச்சியில் 2 வழிப்பறி கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சியில் 2 வழிப்பறி கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X
திருச்சியில் 2 வழிப்பறி கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி உறையூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வியாபாரி ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி மணிகண்டன் (வயது22) என்பவர் ரூ. 1520 பணத்தை வழிப்பறி செய்து கொண்டு ஓடினார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதேபோல கண்டோன்மென்ட் பகுதியில் வ.உ.சி. தெருவில் ஒருவரிடம் ரூ1000 வழிப்பறி செய்த ஹேமேஸ்வரன்( 22) என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் இருவரும் மீண்டும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடக் கூடியவர்கள் என்பதால் அவர்கள் இருவரையும் எந்தவித விசாரணையுமின்றி ஒரு வருடகாலம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டனிமும், ஹேமேஸ்வரனிடமும் இன்று வழங்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்