திருச்சியில் ஒரேநாளில் மட்டும் 123 பேருக்கு தொற்று உறுதி

திருச்சியில் ஒரேநாளில் மட்டும் 123 பேருக்கு தொற்று உறுதி
X
பைல் படம்.
திருச்சியில் கொரோனா பாதிப்பு உயர்ந்து, நேற்று ஒரேநாளில் 123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து இருந்தது. தற்போது உலக நாடுகளில் கொரோனா 3-வது அலை உருவாகி உள்ள சூழலில் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

இதன் காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக இருந்தது.

ஆனால் நேற்று கொரோனா பாதிப்பு உயர்ந்து ஒரேநாளில் மட்டும் 123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 79 ஆயிரத்து 165 ஆக உள்ளது. இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,104 ஆக உள்ளது.

Tags

Next Story